ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை! – Athavan News

இந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நீதிமன்ற விசாரணையின் போது கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், நீதிமன்ற நடவடிக்கைகளின் போதும் சம்பந்தப்பட்ட நீதிவானால் இது சுட்டிக்காட்டப்பட்டதாகக் கூறினார்.

மேலும், போராட்டம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply