இங்கிலாந்தின் ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் இடைநீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணரால் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் குடும்பங்கள் அந்த வைத்தியசாலையின் மூத்த அதிகாரிகளும் வெளியேற வேண்டும் என கூறிவருகின்றனர்.
அதிகாரிகளின் ஓர் அறிக்கையில் காணப்பட்ட குறைப்பாடுகளை கண்டறிந்த நிலையிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஸ்டோரின் எனும் அறுவை சிகிச்சை நிபுணர் மேற்கொண்ட சில அறுவை சிகிச்சைகளில் சிக்கல்கள் இருப்பதாக கண்டறிந்த பின்னர் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் அவரிடம் சிகிச்சை பெற்ற 800 நோயாளிகள் தற்போது மீண்டும் தங்கள் வழக்குகளை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , தான் அறக்கட்டளை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் தனது அனைத்து நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த தரமான பராமரிப்பை வழங்க தான் பாடுபடுவதாகவும் கூறியிருந்தார்.
இதேவேளை, அவரின் குறித்த அறிக்கையில் இவற்றிற்கு மருத்துவ நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அறக்கட்டளையால் கணிசமான எதுவும் செய்யப்படவில்லை என்பதே காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாயார் ஒருவர் குழந்தையை முதன்மைப்படுத்துவதை விட, அவர்கள் தங்கள் நற்பெயரையும் மருத்துவமனையின் முகத்தையும் பாதுகாத்து, தங்கள் வேலையைப் பாதுகாப்பதையே விரும்புகிறார்கள் என்று தோன்றுவதாக விசனம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
