இங்கிலாந்தில் இஸ்லாத்தை ஏற்பவர்கள் அதிகரிப்பு, பெரும்பான்மையானவர்கள் பெண்கள்

இங்கிலாந்தில் இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் ஆவர்.


 கல்வி மற்றும் சமூக ஆராய்ச்சியின்படி, ஒவ்வொரு ஆண்டும் 5000 க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆச்சரியப்படும் விதமாக, இஸ்லாத்தை ஏற்பவர்களில்  60 % முதல் 75 % வரை பெண்கள்.


இஸ்லாத்தை ஏற்பதற்கான காரணமாக ஆன்மீக நிறைவு, திருமண உறவு ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


2000 களின் முற்பகுதியில் இருந்து இந்தப் போக்கு காணக்கூடியதாக உள்ளது. இங்கிலாந்தில் வேகமாக வளர்ந்து வரும் பிரதான மார்க்கமாக இஸ்லாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.


ஏற்கனவே பல கிறிஸ்த்தவ தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாறியுள்ளன. இலங்கை முஸ்லிம்கள் கூட, சில வருடங்களுக்கு முன், கிறிஸத்தவ தேவாலயமொன்றை வாங்கி பள்ளிவாசலாக அதனை பயன்படுத்தி வருகின்றனர்.


இங்கிலாந்தின் பல நகரங்களில் முஸ்லிம் மக்களின் தொகையும், அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply