இங்கிலாந்தில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல்; இருவர் உயிரிழப்பு!

வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு அருகில் யூத சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 53 வயதான அட்ரியன் டால்பி, மற்றும் 66 வயதான மெல்வின் கிராவிட்ஸ் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

பயங்கரவாத சம்பவம் என்று பொலிஸார் கூறியுள்ள இந்தத் தாக்குதல், யூத மத நாட்காட்டியில் புனிதமான நாளான யோம் கிப்பூரில் நடந்தது.

சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதல் நடத்தியவர், சிரிய வம்சாவளியைச் சேர்ந்த 35 வயது பிரிட்டிஷ் குடிமகன் ஆவார்.

நன்றி

Leave a Reply