இங்கிலாந்து தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலக வாய்ப்பு!

மான்செஸ்டர் டெஸ்டின் எஞ்சிய போட்டி நாட்களில் ரிஷப் பந்த் பங்கேற்க வாய்ப்பில்லை, மேலும் வலது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு ஓய்வு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவக் குழு அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.

மீதமுள்ள டெஸ்டில் துருவ் ஜூரெல் விக்கெட் காப்பு பணிகளை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் முக்கியமான கட்டத்தில் ரிஷாப் பந்தின் விலகல் இந்தியாவுக்கு பெரும் அடியாக வந்துள்ளது.

ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த நான்காவது டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் பந்து தாக்கப்பட்டதால், பந்த் ஆட்டத்தை இடைநிறுத்தி ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

68 ஆவது ஓவரில் 37 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, கிறிஸ் வோக்ஸின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய அவர் முயன்றார்.

Image

எனினும், அந்த பந்து அவரது வலது காலில் பட்டது.

இங்கிலாந்து அணி ரிவ்யூ செய்ததில் பந்து முதலில் துடுப்பாட மட்டையில் பட்டது தெரியவந்தது.

மறுபக்கம் ரிஷப் பந்த் வலியால் துடித்தார்.

அவரது வலது கால் பகுதி வீக்கம் அடைந்தது.

அதோடு அவரது பாதத்தில் இருந்து இரத்தம் வந்தது.

இதையடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.

அவரால் நடக்க முடியாத காரணத்தால் வாகனம் மூலம் பெவிலியன் திரும்பினார்.

48 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயத்தால் அவர் வெளியேறினார்.

நன்றி

Leave a Reply