இங்கிலாந்து முழுவதையும் புயல் ஆமி (Storm Amy) ஆட்கொண்டது. புயல் ஆமி, இங்கிலாந்தின் பெரும் பகுதிகளில் பலத்த மழையையும் கடுமையான காற்றையும் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான அனர்த்தத்தில் அயர்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை முழுவதும் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு பலத்த காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை நடைமுறையில் இருந்தது. வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு நாள் முழுவதும் அம்பர் எச்சரிக்கையும் (amber warning) நடைமுறையில் இருந்தது.
பலத்த காற்றின் காரணமாக, குறிப்பாக வெளிப்படையான பகுதிகளில் மணிக்கு 100 மைல்களுக்கு மேல் வேகத்தில் காற்று வீசியதால், பல இரயில்வே பாதைகள் மற்றும் வீதிகள் மூடப்பட்டன. அத்துடன், படகு சேவைகளும் பாதிக்கப்பட்டன.