இத்தாலியன் குரோன்ப்ரீயை கைப்பற்றினார் வெஸ்டாபன்

இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகி 24 சுற்றுக்களை கொண்டதாக கிரோன்ப்ரீ போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் இதுவரை 15 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7 போட்டிகளில் பியாஸ்ட்ரி வெற்றிப்பெற்று அசத்தியிருந்தார். நொரிஸ் 05 வெற்றிகளையும் வெஸ்டாபன் இரண்டு போட்டியிலும்;, ரஸ்ஸல் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 16வது குரொன்ப்ரீ போட்டி இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் 53 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்களின் ஆக்ரோஸமான தொடக்கத்துடன் சூடுபிடிக்க தொடங்கியது. மெக்ஸ் வெஸ்டாபன் நீண்ட போட்டிகளுக்கு பிறகு முன்னிலை பெற்று அசத்தினார். நொரிஸ் மற்றும் வெஸ்டாபன் பலத்த போட்டிப் போட்டுக்கொண்டனர். பியாஸ்ட்ரி அட்டகாசமாக 3மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

2வது சுற்றில் வைத்து நொரிஸ் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார். லெக்லர்க் 3 மிடத்திற்கு முன்னேறி பியாஸ்ட்ரியை பின்னுக்கு தள்ளினார். 4வது சுற்றில் வைத்து நொரிஸை பின்னுக்கு தள்ளி வெஸ்டாபன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார். ஆரம்பமுதலே நொரிஸ் மற்றும் வெஸ்டாபனுக்கு இடையில் பலத்த போட்டி நிலவியது.

6வது சுற்றில் வைத்து வெஸ்டாபனை போன்று பியாஸ்ட்ரியும் சிறப்பாக செயற்பட்டு 3மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

7வது சுற்றில் வைத்து 4மிடத்திற்கான போட்டி சூடு பிடித்தது. அதேநேரம் .இத்தாலியன் குரோன்ப்ரீயை 5முறை வென்ற லூயிஸ் ஹெமில்டன் 6மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

18வது சுற்றில் வைத்து தொடர் போராட்டத்திற்கு மத்தியில் அன்டோலளி 9மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

25வது சுற்றில் வைத்து அலோன்சோவின் வாகனம் சேதமடைந்து. அவரால் தொடர்ந்தும் வாகனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 38வது சுற்றில் வைத்து ஹெமில்டன் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார். இதனால் 3மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

41வது சுற்றில் வைத்து 12வது மற்றும் 13வது இடத்தில் சென்றுக்கொண்டிருந்த பியர்மன் மற்றும் கார்லோ சைன்ஸ் ஆகியோர் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் மோதி விபத்துக்குள்ளானார்கள். 46வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.

47வது சுற்றில் நொரிஸ் பிட்ஸ்டொப்பிற்கு வர இலகுவாக முதலிடத்திற்கு முன்னேறினார் மெக்ஸ் வெஸ்டாபன். பியாஸ்ட்ரி 2மிடத்திற்கு முன்னேறினார் நொரிஸ் 3மிடத்திற்கு சென்றார். இருந்தும் அணி நிர்வாகம் பியாஸ்ட்ரிக்கு நொரிஸிற்கு இடம்கொடுக்குமாறு அறிவுறுத்த பியாஸ்ட்ரி நொரிஸை முந்தி செல்ல அனுமதித்தார்.

51வது சுற்றில் வைத்து அவர்கள் இடத்தை பறிமாறிகொண்ட விடயத்தை வெஸ்டாபனின் அணி நிர்வாகம் அவருக்கு அறிவித்தது. இந்நிலையில் 53 சுற்றுக்களையும் 1மணித்தியாலம் 13 நிமிடங்கள் 24 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து இத்தாலியன் குரொன்ப்ரீ சம்பியனாக மாற்றம்பெற்றார்.

நொரிஸ் இரண்டாமிடத்தையும் பியாஸ்ட்ரி 3மிடத்தையும் பெற்றுக்கொண்டனர். மெக்ஸ் வெஸ்டாபன் இப்பருவகாலத்தில் தனது 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார். கடந்த 4வருடத்தில் இத்தாலியில் தனது 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார்.

நன்றி

Leave a Reply