ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) குறைந்தது 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை மற்றும் ‘லாப்-க்ரோன்’ (lab-grown) உணவுப் பொருட்களைத் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றன என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
பில்லியனர் தொழிலதிபர் Bill Gates தொடர்புடையதாகக் கூறப்படும், சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை உணவு மற்றும் இறைச்சி முதலீடுகள் ஐரோப்பாவில் எதிர்ப்பைச் சந்தித்து வருவதாக சமூக ஊடகங்களில் விவாதம் அதிகரித்துள்ளது.
முன்னதாக Italy ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கை இறைச்சி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் United States-இல் சில மாநிலங்கள் லாப்-க்ரோன் மீட் தொடர்பாக கட்டுப்பாடுகளை பரிசீலித்துள்ளன.
ஆரோக்கியம், பாரம்பரிய வேளாண்மை பாதுகாப்பு, மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த கேள்விகள் பல்வேறு நாடுகளில் விவாதமாகி வருகின்றன. இதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் மாற்று உணவுத் தீர்வாக செயற்கை இறைச்சியை ஆதரிக்கும் விஞ்ஞானிகளும் தொழில்துறையும் உள்ளன.
இந்த விவகாரம் உலகளவில் அரசியல், பொருளாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பெரிய விவாதமாக மாறி வருகிறது.
The post இத்தாலி – ஹங்கெரியை தொடர்ந்து செயற்கை இறைச்சிக்கு ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிக்குமா? appeared first on Global Tamil News.
