இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 171 காலியிடங்கள்…சம்பளம்: ரூ.64,820/- Indian Bank SO Recruitment 2025

Indian Bank SO Recruitment 2025: இந்தியன் வங்கி (Indian Bank) ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கியில் உள்ள 171 சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 13.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் இந்தியன் வங்கி (Indian Bank)
காலியிடங்கள் 171
பணிகள் சிறப்பு அதிகாரி/Specialist Officer (SO)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 13.10.2025
பணியிடம் தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://indianbank.bank.in/

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • சிறப்பு அதிகாரி/Specialist Officer (SO)  – 171 காலியிடங்கள்

வகை வாரியான காலியிட விவரங்கள்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் வங்கி Specialist Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், சம்பந்தப்பட்ட துறையில் Graduate, B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, MS, ICSI போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 23 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் தளர்வு

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
  • PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் தளர்வு உண்டு.
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
  • முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) விண்ணப்பதாரர்களுக்கு அரசின் கொள்கைகளின்படி தளர்வு வழங்கப்படும்.

மேலும் விரிவான வயது வரம்பு விவரங்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025-இல் Specialist Officer பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து கூடுதல் தகவல்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • எழுத்து அல்லது ஆன்லைன் தேர்வு (Written/Online Test) அதனைத் தொடர்ந்து நேர்காணல்.
  • விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் (Shortlisting of applications) அதனைத் தொடர்ந்து நேர்காணல்.
  • SC/ST/PwBD பிரிவினருக்கு: ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 23.09.2025
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2025

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 23.09.2025 முதல் 13.10.2025 தேதிக்குள் https://indianbank.bank.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply