இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு | this is the right time to invest in india says pm modi

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும், புது​மை​களை உரு​வாக்​க​வும் இதுவே சரி​யான நேரம் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் உள்ள யசோ பூமி​யில் இந்​திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மேக் இன் இந்​தியா திட்​டத்​தில் மொபைல்​ போன்​கள், செமிகண்​டக்​டர், எலக்ட்​ரானிக்ஸ் உள்​ளிட் பல்​வேறு துறை​களில் வளர்ச்சி மற்​றும் சீர்​திருத்​தங்​களின் வேகத்தை அரசு துரிதப்​படுத்தி வரு​கிறது.

இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும், புது​மை​யான கண்​டு​பிடிப்​பு​களை உரு​வாக்​க​வும் இதுவே சிறந்த சரி​யான நேரம். இந்​தி​யா​வின் ஜனநாயக அமைப்​பு, அரசின் வரவேற்​கத்​தக்க அணுகு​முறை மற்​றும் வணி​கம் செய்​வதற்​கான எளிமை ஆகியவை முதலீட்​டாளர்​களின் நட்பு மிகுந்த நாடு என்ற பிம்​பத்தை நம்​நாடு அடைய உதவி​யுள்​ளன.

இந்​தியா கடந்த தசாப்​தத்​தில் டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய முன்​னேற்​றத்தை எட்​டி​யுள்​ளது. 1 ஜிபி டேட்டா ஒரு கப் தேநீரின் விலையை விட மலி​வான​தாக மாறி​யுள்​ளது.

ஒரு காலத்​தில் 2ஜி உடன் போராடிய நமது நாடு, இன்று 5ஜி சேவை கிட்​டத்​தட்ட ஒவ்​வொரு மாவட்​டத்​தை​யும் சென்​றடை​யும் அளவுக்கு முன்​னேறி​யுள்​ளது. இந்​தி​யா​வில் டிஜிட்​டல் இணைப்பு என்​பது ஒவ்​வொரு இந்​தி​யரின் வாழ்​விலும் ஒருங்​கிணைந்த அங்​க​மாகும்.

நிதி​சார் மோசடி பாது​காப்​பு, குவாண்​டம் தகவல் தொடர்​பு, 6ஜி அலைக்​கற்றை சேவை, கண்​ணாடி இழை தகவல் தொடர்​பு, செமிகண்​டக்​டர் உற்​பத்தி உள்​ளிட்ட பல்​வேறு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கருப்​பொருள்​களில் புத்​தொழில் நிறு​வனங்​கள் எண்​ணற்ற செயல்​திட்​டங்​களை வழங்​கி​யுள்​ளன.

மொபைல், தொலைத்​தொடர்​பு, மின்​னணு​வியல் உள்​ளிட்ட ஒட்​டுமொத்த தொழில்​நுட்ப சூழலில் ஏற்​படும் சிக்​கல்​களுக்கு உலக நாடு​களுக்கு தீர்வு வழங்க இந்​தி​யா​வுக்கு சிறப்​பான வாய்ப்பு கிடைத்​துள்​ளது. இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​தார்​.

நன்றி

Leave a Reply