இந்தியாவின் ஜார்க்கண்டில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பேருந்தில் சுமார் 35பேர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதற்கு பொலிஸார் , மற்றும் அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியன இணைந்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விபத்தில் காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதோடு மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றமைக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் என அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.