இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது என்று ஹெக்ஸெத் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பிற்குப் பின்னர் எக்ஸில் பதிவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வொஷிங்டன் டெல்லியன் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள அண்மைய பதட்டங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
