இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்!

இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ஆயுத கொள்முதலில் இந்திய பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவில் இருந்து இந்திய விமானப்படைக்கு போர் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் இந்திய விமானப்படையுடனான ஆரம்ப ஒப்பந்தம் 35 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த குறித்த ஒப்பந்தம் அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply