2025 ஆசியக் கிண்ண தொடரில் இன்று (24) நடைபெறும் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணியானது இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியானது இன்றிரவு 08.00 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
சுப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது தொடக்கப் போட்டியில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பெறும் வெற்றியானது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியை, ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு கொண்டு செல்லும்.
இதற்கிடையில் பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான வெற்றியுடன் சுப்பர் 4 சுற்றினை ஆரம்பித்தது.
இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவது அதன் வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இறுதிப் போட்டிக்கும் அவர்களை அழைத்துச் செல்லும்.
இருப்பினும் இரு அணிகளுக்கும் இடயிலான கடந்த கால போட்டி வரலாறு இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 17 டி:20 போட்டிகளில் இந்தியா 16 இல் வெற்றி பெற்றுள்ளது.