இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி: பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள் | Indians boycott Pepsi Coca-Cola KFC 50 percent us tariff echo

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் 50% வரி​வி​திப்​பால் பெப்​சி, கோக-கோலா, மெக்​டொ​னால்ட்​ஸ், கேஎப்சி உள்​ளிட்ட அமெரிக்க தயாரிப்​பு​களை இந்​தி​யர்​கள் புறக்​கணிக்க தொடங்கி உள்​ளனர்.

ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாகக் கூறி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்​துள்​ளது. இது உலக நாடு​களுக்கு விதிக் கும் மிக அதி​கபட்ச வரி ஆகும். இதனால் இந்​திய பொருட்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து இந்​தி​யர்​கள் மத்​தி​யில் அமெரிக்கா​வுக்கு எதி​ரான மனநிலை உரு​வாகி உள்​ளது. குறிப்​பாக, பெப்​சி, கோக-கோலா, சப்​வே, மெக்​டொ​னால்ட்​ஸ், கேஎப்சி உள்​ளிட்ட அமெரிக்க தயாரிப்​பு​களை இந்​தி​யர்​கள் புறக்​கணிக்க தொடங்கி உள்​ளனர்.

இதுகுறித்து யோகா குரு பாபா ராம்​தேவ் கூறும்​போது, “பெப்​சி, கோக-கோலா, சப்​வே, கேஎப்​சி, மெக்​டொ​னால்ட்ஸ் உள்​ளிட்ட கடைகள் பக்​கம் ஒரு இந்​தி​யர்​கூட செல்​லக்​கூ​டாது. இந்த பிராண்ட்​களை பெரு​மள​வில் புறக்​கணிக்க வேண்​டும். அப்​படி நடந்​தால் அமெரிக்கா மிகப்​பெரிய இழப்பை சந்​திக்​கும்’’ என்​றார்.

இதனிடையே, உலகின் 3-வது பெரிய பொருளா​தார நாடாக இந்​தியா உரு​வெடுக்க வேண்​டுமென்​றால், உள்​நாட்டு தயாரிப்​பு​களை வாங்க வேண்​டும் என இந்​தி​யர்​களை பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்தி வரு​கிறார்.

அமெரிக்​கா​வின் அதிக வரி காரண​மாக, பிரான்​ஸ், இங்​கிலாந்​து, கனடா உள்​ளிட்ட நாடு​களும் அமெரிக்க பொருட்​களை ஏற்​கெனவே புறக்​கணிக்​கத் தொடங்கி விட்​டன. இந்த சூழ்​நிலை​யில், 140 கோடி மக்​களைக் கொண்ட இந்​தி​யா​வும் புறக்​கணிக்​கும்​போது அமெரிக்க நிறு​வனங்​கள் மிகப்​பெரிய இழப்பை சந்​திக்​கும். மெக்​டொ​னால்ட்ஸ் உணவகங்​களை மேற்கு மற்​றும் தென்​னிந்​தி​யா​வில் நடத்​தும் வெஸ்ட்​லைப் புட்​வேர்ல்டு கடந்த நிதி​யாண்​டில் ரூ.2,390 கோடி வரு​வாய் ஈட்​டியது. இது முந்​தைய ஆண்​டை​விட 5% அதி​கம்.

இது​போல பெப்​சிகோ நிறு​வனம் ரூ.8,200 கோடி வரு​வாய் ஈட்டி உள்​ளது. இந்​நிறு​வனம் கடந்த 3 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்​தது குறிப்​பிடத்தக்​கது.

நன்றி

Leave a Reply