இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா 15%-16% ஆகக் குறைக்க வாய்ப்பு!

இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்க வரிகளை தற்போதைய 50% இலிருந்து சுமார் 15–16% ஆகக் குறைக்கக்கூடிய நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் இருப்பதாக கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் முக்கியமாக எரிசக்தி மற்றும் விவசாயத் துறைகளில் கவனம் செலுத்துகிறது.

ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாகக் குறைப்பது குறித்து விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாகும்.

இது ரஷ்ய எரிசக்தி விநியோகங்களை உலகளாவிய அளவில் சார்ந்திருப்பதைக் கட்டுப்படுத்தும் வொஷிங்டனின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னர் ஒப்பந்தத்தை முடிக்க இரு தரப்பினரும் பணியாற்றி வருவதாகவும், அங்கு முறையான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஒப்பந்தம் முடிவடைந்தால், 2020 இல் கட்டண வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் முடங்கியதிலிருந்து இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவுகளில் மிக முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கும். 

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக அமெரிக்கா தொடர்ந்து உள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 200 பில்லியன் டொலர்களைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply