இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டதா? – அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்ட 5 ஏஐ தளங்கள் மறுப்பு | ai chatbot platforms about indian economy collapsed really post trump us tariff

புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதற்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் தனது வலைதளத்தில் கூறும்போது, “ரஷ்யாவுடன் சேர்ந்து இந்திய பொருளாதாரமும் செயலிழந்து விட்டது. அதை பற்றி எனக்கு கவலையில்லை” என்று கூறியிருந்தார்.

இந்​நிலை​யில், தனி​யார் செய்தி சேனல் ஒன்று அமெரிக்​கா​விலேயே உரு​வாக்​கப்​பட்ட செயற்கை நுண்​ணறிவு தளங்​களில் (ஏஐ பிளாட்​பார்ம்), ட்ரம்ப் கூறியபடி இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்​து​விட்​டதா என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு அந்த ஏஐ தளங்​கள் நேரெ​தி​ராக கருத்து தெரி​வித்​துள்​ளன. சேட்​ஜிபிடி, கிராக், ஜெமினி, மெட்டா ஏஐ, கோபைலட் ஆகிய 5 ஏஐ தளங்​களில், ‘இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்து விட்​ட​தா?’ என்று கேள்வி கேட்​டுள்​ளனர். அதற்கு அந்த தளங்​கள் அனைத்​தும் ட்ரம்ப் கருத்​துக்கு நேரெ​தி​ராக கருத்து தெரி​வித்​துள்​ளன. அந்த ஏஐ தளங்​கள் அளித்த பதில்​கள் வரு​மாறு:

சாட்​ஜிபிடி: இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்து விட்​டது என்​ப​தற்கு மிக நீண்ட தூரத்​தில் உள்​ளது. இந்​திய பொருளா​தா​ரம் துடிப்​புடன் உள்​ளது. லட்​சி​யத்​துடன் உள்​ளது.

கிராக்: இல்​லை… இந்​திய பொருளா​தா​ரம் செயலிழக்​க​வில்​லை. உலகள​வில் மிக வேக​மாக வளரும் மிகப்​பெரிய பொருளா​தார நாடாக இந்​தியா உள்​ளது.

ஜெமினி: இந்​திய பொருளா​தா​ரம் மிக வேக​மாக​வும் வலிமை​யாக​வும் வளர்ந்து வரு​கிறது.

மெட்டா ஏஐ: இந்​திய பொருளா​தா​ரம் செயலிழக்​க​வில்​லை. உலகள​வில் மிக வேக​மாக வளர்ந்து வரு​கிறது. மிகப் பெரிய பொருளா​தா​ரம் கொண்ட நாடாக உரு​வாகி வரு​கிறது.

கோபைலட்: செயலிழந்​து​விட்​டது என்​ப​தற்கு அரு​கில் கூட இல்​லை. உண்​மை​யில் செயலிழந்​து​விட்​டது என்​ப​தற்கு நேரெ​தி​ராக உள்​ளது. இப்​படி அமெரிக்​கா​விலேயே உரு​வாக்​கப்​பட்ட ஏஐ தளங்​கள் ட்ரம்ப் கருத்​தை மறுத்​து உண்​மையை கூறி​யுள்​ளன.

நன்றி

Leave a Reply