இந்திய மக்களவையில் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா 3 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.
அரசியலமைப்பு திருத்த மசோதா, ஒன்லைன் விளையாட்டு ஒழுங்குப்படுத்தும் மசோதா, மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகிய 3 முக்கிய மசோதாக்களை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார்.
இதில் முக்கியமானதாக, கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர் அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பல எதிர்க்கட்சி முதல்வர்கள், அமைச்சர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.