லண்டன்: இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்திலும் தொழில் துறையில் முத்திரை பதித்து வரும் இந்துஜா குழுமத்தின் தலைவராக இருந்த ஸ்ரீசந்த் இந்துஜா கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் காலமானார்.
இதையடுத்து அவருடைய இளைய சகோதரர் கோபிசந்த் இந்துஜா (85) தலைவரானார். இவரது தலைமையில் இந்துஜா குழுமம் பல்வேறு துறையில் கால் பதித்தது. இங்கிலாந்து மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இவரும் இவரது சகோதரரும் அடிக்கடி இடம்பெற்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.
இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராமி ரங்கர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நண்பர்களே, நமது அன்பு நண்பர் ஜி.பி.இந்துஜாவின் மறைவு செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி’’ என கூறப்பட்டுஉள்ளது.
