இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிடோஆர்ஜோ நகரில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பாடசாலையில் நேற்றைய தினம் பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடிய வேளையிலேயே எதிர்பாராத குறித்த பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இரு மாடி கொண்டிருந்த கட்டிடத்திற்கு பலவீனமான அடித்தளம் இருந்ததால், மேலும் இரண்டு மாடிகள் கட்டப்பட்டதைத் தாங்க முடியாமல் இடிந்து விட்டதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.