அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவா் குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளாா்.
The post இனி பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது appeared first on Global Tamil News.
