இன்​போ எட்ஜ் பணியாளர்களுக்கு விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ் தீபாவளி பரிசு | Info Edge employees receive VIP suitcase, sweet box as Diwali gift

புதுடெல்லி: பிரபல தொழில்​நுட்ப நிறு​வன​மான இன்​போ எட்ஜ் தனது பணி​யாளர்​கள் அனை​வருக்​கும் விஐபி சூட்​கேஸ், ஸ்வீட் பாக்​ஸ், விளக்கு அடங்​கிய பரிசுத் தொகுப்பை தீபாவளி பரி​சாக வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து பணி​யாளர்​கள் வெளி​யிட்ட பதி​வில், “அலு​வல​கத்​துக்​குள் நுழைந்​த​போது ஒவ்​வொரு பணி​யாளரின் மேசை​யிலும் கம்ப்​யூட்​டருக்கு பதிலாக அலங்​கரித்து வைக்​கப்​பட்ட சூட்​கேஸ், அதனுடன் சேர்த்து ஸ்வீட் பாக்ஸ் மற்​றும் தீபமேற்​றும் விளக்கு ஆகியவை தீபாவளி பரி​சாக அடுக்​கப்​பட்​டிருந்​தது. இதைப் பார்த்த ஒவ்​வொரு பணி​யாளர்​களுக்​கும் இன்ப அதிர்ச்​சி​யாக இருந்​தது” என்று தெரி​வித்​துள்​ளனர்.

இதைப் பார்த்த இன்​ஸ்டா பயனர்​கள் பலர், எங்​களுக்​கும் இது​போல் எப்​போது தீபாவளி பரிசு கிடைக்​கும் என்று காத்​திருப்​ப​தாக பதி​விட்​டுள்​ளனர். நொய்​டா​வில் கடந்த 1995 -ம் ஆண்டு சஞ்​சீவ் பிக்​சந்​தானி என்​பவ​ரால் நிறு​வப்​பட்ட இந்த நிறு​வனம் தற்​போது இந்​தி​யா​வின் முன்​னணி ஆன்​லைன் நிறு​வன​மாக வகைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தேசிய பங்​குச் சந்தை புள்​ளி​விவரப்​படி, இன்போ எட்ஜ் நிறு​வனத்​தின் மொத்த சந்தை மூல தனம் ரூ.86,447 கோடியாக உள்ளது.

நன்றி

Leave a Reply