இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (April 05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4, 765 ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை, ஆயிரத்து 910 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

நன்றி

Leave a Reply