இன்று மீண்டும் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை – Athavan News

அரசியலமைப்பு பேரவை இன்று (12) மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து இதன்போது கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் 37 ஆவது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார்.

அதன்படி, இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை , பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பாக இறுதி முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், திருமதி ரேணுகா ஏகநாயக்க தேசிய பொலிஸ் ஆணையத்தின் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதம் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

நன்றி

Leave a Reply