மேற்கு மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல் GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.
இந்த செயல்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று 1000 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்த செயல்முறை மிக விரைவில் தொடங்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.