இப்படித்தான் நம்மில் பலரும் சூடு, சுரணை எதுவும் இல்லாமல்..

நீங்கள் பட த்தில் மீனின் வாயில் காண்பது அதன் நாக்கு அன்று. மாறாக (Cymothoa exigua) என்ற ஒரு வகை ஒட்டுண்ணியாகும். 


இந்த ஒட்டுண்ணியானது மீனின் செவுள் வழியாக நுழைந்து, அதன் நாக்கை சிறிது சிறிதாக அறுத்து, பின்னர் அதுவே நாக்காக மாறிவிடும், பின் மீன் உட்கொள்ளும் அனைத்து உணவையும் தனதாக்கிக் கொள்ளும். 


அந்த அப்பாவி மீன் பட்டினியால் சாகும் வரை இந்த ஒட்டுண்ணி அதனை பகடை காயாக பயன்படுத்தும். பின்னர் மற்ற ஒரு பகடை காயை தேடிச் செல்லும். 


சில சமயங்களில் மீனானது “பெடர்சன் இறால்” என்று அழைக்கப்படும் ஒரு வகை மோட்சம் அளிக்கும் இறாலின் உதவியை வேண்டி நிற்கும். இந்த இறால் அந்த ஒட்டுண்ணியை பிடுங்கி எடுத்து அழித்துவிடும்.


இப்படித்தான் நம்மில் பலரும், சூடு சுரணை எதுவும் இல்லாமல் பிறர் மீது  அத்துமீறி ஆதிக்கம் செலுத்துகின்றனர். , அவர்களை சுரண்டியுண்டு வாழ்கின்றனர். பலியாகும் அப்பாவிகள் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் திண்டாடுகின்றனர். 


✍ தமிழாக்கம் / imran farook

நன்றி

Leave a Reply