"இப்படியும் தேடலாம் இறைப்பொருத்தம்"

எதையும் எதிர்பாராமல் இதுபோன்று செய்யும் சேவைகள் ஒரு கட்டத்தில்  அலுப்பு ஏற்படுத்தும். ஆனால் இந்தியா – கோட்டயம் மாவட்டத்தில் ஈராற்றுப்பேட்டை சேர்ந்த 60 வயதை கடந்த அப்துல் சலாம் அவர்களுக்கு  கடந்த 20 வருடங்களில் ஒருநாள் கூட சுமையாக தோன்றவில்லை.


ஈராற்றுப்பேட்டை போக்குவரத்து நெருக்கடி மிக்க பிரதான சாலையில் அமைந்துள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளியோடு இணைந்த அரபி மதரஸாவுக்கு வரும் சிறுவர் சிறுமியர் சாலையை கடக்க உதவுபவர்.

அந்த சாலையோரத்தில் கடை நடத்தி வரும் அப்துல் சலாம் தினமும்  அதிகாலை 6.30 மணிக்கு மதரஸா செல்ல தனது கடையருகில் வரும் குழந்தைகளை சாலையோரம் நிறுத்தி தனது கையில் வைத்துள்ள STOP என்று எழுதியுள்ள போர்டைக் காட்டி சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி பிள்ளைகள் பாதுகாப்பாக மதரஸா செல்ல வழிகாட்டி வருகிறார்.

அதுபோலவே மதரஸா முடிந்து 8மணிக்கு வீடு திரும்பும் போதும் இதேபோன்று STOP போர்டு காட்டி அனுப்பும் மனிதநேய அறப்பணியை இருபது வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார்.

சாலையின் குறுக்கே நின்று வேகமாக வரும் வாகனங்களை தடுத்து குழந்தைகளை கடத்தி விடும்போது சில வாகன ஓட்டிகள் கடினமான வார்த்தைகளால் திட்டும் போது,  மதரஸா போய் விட்டு திரும்பி வரும் குழந்தைகள் ஒவ்வொருவரும் 

மாமா அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி விட்டு போவது மனதுக்கு இதமாக இருக்கும் என்று கூறுகிறார் அப்துல் சலாம்..

Colachel Azheem

நன்றி

Leave a Reply