இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலையொன்றை பறிமுதல் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து சிலை கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மிழக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று (02) மாலை திருச்சூரில் உள்ள அண்ணா காலனியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டவர்கள் 52 மற்றும் 35 வயதுடையவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களிடம் உள்ள சிலையின் மதிப்பு மில்லியன் கணக்கில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அந்த சிலை தங்கம், வெள்ளி, ஈயம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஐந்து உலோகங்களால் ஆன ஒரு பழங்கால சிலை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிலையை இலங்கைக்கு கொண்டு சென்று பின்னர் ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதாக தெரியவந்தது.