
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் சிக்கி, இலங்கைக் கடற்பகுதிக்கு அருகே மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ தாக்குதலில் சிக்கி, இலங்கைக் கடற்பகுதிக்கு அருகே மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ (IRIS Dena) சிதைவுகளிலிருந்து இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இலங்கையின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல்கள், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் கப்பல் கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து மீண்டும் ஈரானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வைத்து அமெரிக்காவால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்டத் தகவல்களின்படி கப்பலில் 140 பேர் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் குறைந்தது 180 பேர் வரை பயணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மீதமுள்ளவர்களைத் தேடும் பணியும், உடல்களை அடையாளம் காணும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈரானின் உச்சத்தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா – ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போர், தற்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
