இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!

உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் ஒன்றான எச்.ஐ.வி தொற்று இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எச்.ஐ.வி தொற்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துவதுடன் இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது உயிராபத்திற்கு வழிவகுப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பினை பேணுவதன் ஊடாக உடல் முழுவதும் சுமார் 72 மணிநேரத்திற்குள் வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊசி மூலம் போதைப்பொருள் பாவணை மூலமும் வெகுவாக பரவுவதுடன் ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவது இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் எயிட்ஸ் நோயாளியாக இருக்கும் கர்ப்பிணித்தாய்மாரிடத்தில் இருந்து அவர்களுக்கு பிறக்கவுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 411 எச் ஐ வி நோயாளர்களும், 2022 இல் 607 நோயாளர்களும், 2023 இல் 697 நோயாளர்களும், 2024 இல் 824 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதுடன் அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இது 7:1 விகிதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை அடையாளம் காணப்பட்ட புதிய எயிட்ஸ் நோயாளர்கள் உட்பட, நாட்டில் இதுவரை 6,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024 ஆம் ஆண்டில், 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளனர் .

மேலும் இதுவரை எயிட்ஸ் தொற்றினால் 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தளவில் எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் இலங்கை கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு பதிவான புதிய தொற்றுகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply