இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி அமுலாகும் வகையில் ஒரு வருட காலத்திற்கு அவர் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 30ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 2 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.