(அன்ஸிர்)
2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகாலம் நிறைவடைகிறது. பல்லினங்கள் வாழும், பல மொழி பேசும், சமஸ்டி ஆட்சி முறையைப் பின்பற்றும் சுவிஸ் நாட்டின் ஆட்சி, நிர்வாக முறையை அறிந்து கொள்ளும் நோக்குடன்
இலங்கை அரசியல்வாதிகள் அடங்கிய குழுவொன்று இம்மாதம் (செப்டெம்பர்) 14 ஆம் திகதி சுவிஸ் வந்தடைந்தது.
அமைச்சர் உபாலி பன்னிலாகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், NPP யின் செயலாளர் நிகால் அபேசிங்க, UNP யின் செயலாளர் தலதா அத்துக்கோரள, தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் கஜேந்திரன்குமார் பொன்னம்பலம் SJB சார்பில் அலவத்துக்கொட உள்ளிட்ட 13 அரசியல்வாதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் சுவிற்சர்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு, அதன் பிரதிநிதிதிகள், பேர்ன் கண்டோனில் அமைந்துள்ள சுவிஸ் பாராளுமன்றம், உள்ளுர் அதிகார சபைகள், பல்லின சமயக் குழுக்கள், புலம்பெயர் இளைஞர் அமைப்புக்கள் இலங்கைத் தூதரக அதிகாரிகளையும் சந்தித்தனர்.
அத்துடன் பிரிபேர்க் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தனர்.
இவர்கள் நாளை மறுதினம், ஞாயிற்றுக்கிழமை (19) ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.