இலங்கை – ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் விசேட சந்திப்பு

இலங்கை வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும், ஜப்பான் வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசியா விவகாரங்களுக்கான தலைமை இயக்குநர் திரு. ஷிங்கோ மியமோட்டோ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அவர்கள் அகிரா இஷிமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

blank

இச்சந்திப்பின் போது, JICA நிதியுதவி பெற்ற அபிவிருத்தி திட்டங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகள், முதலீட்டும் சுற்றுலா துறைகளும் தொடர்பாக மேலதிக ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் வழிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இச் சந்திப்பில்வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் ஜெனரல் ருவாந்தி டெல்பிட்டியாவும் கலந்துகொண்டார்.

blank

இலங்கையுடனான நீடித்த மற்றும் நம்பகமான பங்கு கொண்ட நட்புறவுக்கு ஜப்பான் அரசு வழங்கும் ஒத்துழைப்புக்கு பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும் எனவும்  அவர் உறுதியளித்தார்.

blank

நன்றி

Leave a Reply