பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவர் பிரதமர் கலாநிதி ஹரினி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையை பாதித்த திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர், மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக ஆஸ்திரேலியா வழங்கிய உதவிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக 3.5 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தமது ஆதரவை ஆஸ்திரேலியா தொடர்ந்தும் வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதிநதிகள் உறுதியளித்தனர்.
