இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு குறித்து சபையில் விளக்கினார் ஜனாதிபதி!

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20% ஆக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கினார்.

இலங்கை மீது ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகளைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு திறமையான குழு நியமிக்கப்பட்டதாகவும்  ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமந்த ஹுலங்கம மற்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கிய அமெரிக்க தூதர் ஆகியோரின் பங்கேற்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

அத்துடன் அமெரிக்கா முன்வைத்த சில திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும், இன்னும் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றம் மற்றும் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், இறுதி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply