இலங்கை வள நாட்டின் யாழ்ப்பாண மாவட்ட வலிகாம கிழக்கு பிரதேச செயல் பிரிவில் அமைந்துள்ளது நீர்வேலிக் கிராமம். – பவித்திரா ஞானகுமார் 

யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில் ஏழாவது மைலில் அமைந்துள்ளது எம் கிராமம். வலிகாமம் கிழக்கு பகுதிகளில் இருந்து பாய்ந்து வரும் மழை நீரை தன்னுள் அடக்கி அதனை தனக்கு நீராலான வேலியாக்கி தனது கிழக்ககெல்லையாக அமைத்துக் கொண்டதால் நீர்வேலி எனும் பெயரைக் கொண்டது எமது கிராமம்.வரலாற்றுச் சிறப்புமிக்க பண்பாட்டுச் செறிவுள்ள ஒரு கிராமமாகும். விவ சாயம் (வாழை) கல்வி மற்றும் இந்து சமய வழிபாட்டுத் தலங்களுக்குப் புகழ்பெற்ற இந்த ஊர் பல அறிஞர்களையும் கலைப் பண்பாட்டாளர்களையும் உருவாக்கிய பெருமையுடையது.

நீர்வேலி கிராமம் விவசாய வளர்ச்சியிலே மிக இயற்கை பொருந்தி பச்சை பசேலென காணப்படும் ஒரு கிராமமாகும். அங்கு பலவகையான விவசாயம் செய்யப்பட்டு வந்தாலும் வாழைமர விவசாயமே மிகப் செழுமைமிக்க விவசாயத் தொழிலாக செய்யப்பட்டு வருகின்றன.நீர்வேலி எனும் பெயர் சொன்னாலே அனைவரின் நினைவிற்கும் வருவதும் வாழைமர விவசாயமாகும்.

இங்கே உள்ள மக்களின் பாரம்பரிய தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. இன்றைக்கு ஏறத்தாழ பன்னிராயிரம் பரப்பிற்கு மேற்பட்ட நிலங்களில் வாழை மரங்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 70 ஆயிரம் வாழைக்கன்றுகள் காணப்படுகின்றன என்பது ஆய்வாகும். யாழ்ப்பாணத்திலேயே வாழை மர விவசாயத்திற்கு பெயர் போன இடமாக நீர்வேலி காணப்படுகின்றது.

நீர்வேலியில் 1950 ஆம் ஆண்டு சிறிய அளவில் வாழைமர சந்தை ஒன்று உருவாக்கப்பட்டது . பின் அது உருமாறி இப்போது வலி கிழக்கு வாழைக்குலை உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்கம் என்று வளர்ச்சி கண்டுள்ளது. இன்று இலங்கையில் பல இடங்களுக்கு இங்கிருந்தே வாழைக்குலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சங்கமானது தொழிலாளிகள் தமது தோட்டங்களில் விளையும் வாழைக்குலைகளை கொண்டு வந்து அன்றைய நாளின் விலைக்கு விற்று செல்ல அதனை மொத்த விற்பனையாக ஏற்றுமதி செய்யும் சங்கமாக தொழில்பட்டு வருகின்றது.

இங்கே வாழை மர விவசாயமானது வாழை மரத்தின் வகைகளை வைத்து சிறு விவசாயம் பெரு விவசாயமென மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதாவது எங்கள் கிராமத்தில் கதலி வாழைப்பழம் இதரை வாழைப்பழம் கப்பல் வாழைப்பழம் செவ்வாழை வாழைப்பழம் போன்றன அனைத்து மக்களாலும் அதிகம் விரும்பப்பட்டு அதிகம் விற்பனை செய்யப்படும் வகைகளாகும். அதனால் இங்கு அவை பெருமளவில் விவசாயம் செய்யப்படும் வாழை வகைகளாக காணப்படுகின்றன. அத்தோடு கெவண்டிஸ் கறிவாழை சீனிகாதலி மருத்துவைப்பழம் போன்ற வாழை வகைகளும் பயிர் செய்யப்பட்டு வந்தாலும் பெருமளவில் அவை விவசாயம் செய்யப்படுவதில்லை.

இங்கே பயிர் செய்யப்படும் வாழை வகைகளின் சிறப்புகள் மருத்துவ குணங்களை எடுத்து நோக்கினோம் ஆனால்

வாழைப்பழங்கள் சுவையில் மட்டுமல்லாது ஒவ்வொரு வகையும் தனித்துவமான மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன. கதலி வாழைப்பழம் ஆனது “வாழைகளின் அரசி” என அழைக்கப்படுகிறது. சடங்குகள் மற்றும் கோவில் வழிபாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பழம் இது.

மருத்துவ குணம் ஆக செரிமான மண்டலத்தை சீராக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் உணவாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும்.இதரை ஃ பூவன் வாழைப்பழம் ஆனது இங்கு பரவலாகக் கிடைக்கும் வகை. இதன் தோல் மெல்லியதாக இருக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள கழிவுகளை நீக்கிஇ குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பித்தத்தைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் பழம் ஆகும்.கப்பல் வாழைப்பழம் ஆனது சற்று பெரிய அளவில்இ மஞ்சள் நிறத்தில் இருக்கும்.இதில் மாவுச்சத்து (ஊயசடிழாலனசயவநள) மற்றும் நார்ச்சத்து அதிகம். இது உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது. உடல் மெலிந்திருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க இது சிறந்த உணவு ஆகும்.

செவ்வாழைப்பழம் ஆனது மற்ற பழங்களை விட இதில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் சி அதிகம். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கிஇ ஆண்மைக்குறைவு பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. கெவன்டீஸ் வாழைப்பழம் ஆனது இது உலக அளவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் “பச்சை வாழை” வகையைச் சேர்ந்தது.

இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டீ6 அதிக அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்இ மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.கறிவாழை ஃ மொந்தன் பழம் ஆனது  இது பழமாக உண்பதை விடஇ சமையலுக்கு (காயாக) அதிகம் பயன்படுத்தப்படுகிறது.மூல நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. இதன் தண்டு மற்றும் காய் சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் பழுக்காத கறிவாழையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சீனிக்கதலி பழம் ஆனது மிகச்சிறிய அளவில் இருந்தாலும்இ அதிக இனிப்புச் சுவை கொண்டது.சர்க்கரை அதிகம் இருந்தாலும்இ இது வயிற்றுப் புண்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது. உடல் சூட்டைத் தணித்து குடல் பாதையை மென்மையாக வைத்திருக்கும்.

மருத்துவ வாழை நாட்டு மருந்துகளிலும்இ பத்திய உணவுகளிலும் முக்கிய இடம் பிடிக்கும்.இதன் பெயருக்கேற்பஇ இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு வரும் சளிஇ இருமல் பாதிப்புகளின் போது இதைக் சுட்டுப் கொடுக்கும் வழக்கம் எமது கிராமங்களில் உண்டு. இது நச்சுக்களை வெளியேற்றும் தன்மையுடையது. ஆகவே எனது கிராமமான நீர்வேலியில் விளைவிக்கப்படும் வாழை மரங்களானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக காணப்படுகின்றது .

விவசாயத்துக்கு எமது விவசாயிகள் இயற்கையான உரங்களையே பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்கின்றனர். மேலும் வாழைக்குலைகளை பழுக்க வைப்பதற்கு செயற்கையான முறையில் மருந்து அடிப்பதில்லை.அதாவது இங்கே பாரம்பரிய முறையிலேயே வாழைகுலைகளை பழுக்க வைப்பதற்கு புகை மூட்டல் எனும் முறை ஆதிகாலம் தொடக்கம் இன்றைக்கு வரை செயல் முறையில் காணப்பட்டுவருகின்றது.அதாவது புகைமூட்டல் என்பது வாழைக்குலை ஒன்றை எடுத்து அதன் உயரத்திற்கு மண்ணில் குழி தோண்டி அதனுள் அக்குலையை இட்டு மண்ணால் மூடி அதன் மேல் காய்ந்த வாழைத் தண்டுகள் வாழை இலைகள் போட்டு மூடுதல். பின் அதற்கு பக்கத்தில் இன்னொரு குழி தோண்டி அக்குழி மூலம் வாழைக்குலை இருக்கும் குழிக்குள் புகை செல்லுபடி துளையிட்டு அதனுள் குப்பைகள் இட்டு நெருப்பு மூட்டுதல். அவ் நெருப்பின் மூலம் வரும் புகையானது வாழைக்குலையை பழுக்க வைக்கும். இவ் புகைமூட்டல் முறையானது மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறையாகும். இப்போது சில இடங்களில் இவ்வாறு புகை மூட்டாமல் வாழைக்குலையை ஒரு குழி தோண்டி அதனுள் வைத்து விட்டு சாம்பிராணி குச்சியை தீமூட்டி அதனுள் வைத்து மூடி விடுவார்கள் இவ்வாறும் புகை மூட்டல் ஆனது நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

இது மட்டும் அல்லாது எனது கிராமத்தில் பெண்களின் சுய கைத்தொழிலை மேம்படுத்தும் பொருட்டு வாழை மரத்தின் பகுதிகளை வைத்து கைவினைப் பொருட்களாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக எமது ஊரில் ஒரு நிறுவனமும் இயங்கி வருகின்றது.

ஆகவே எனது நீர்வேலி கிராமத்தின் மக்களின் வருமானத்தில் பாரியளவு அதிகரிப்பை ஏற்படுத்துவது இவ் வாழை மர விவசாயமாகும். இக்காலகட்டத்தில் எனது கிராமத்தில் விவசாய இடங்களில் கட்டடங்கள் அமைக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகின்ற நிலையில் காணப்பட்டாலும் மக்கள் தமது சிறு காணி பகுதியில் ஆவது விவசாயம் செய்து வருகின்றனர். அதாவது ஒரு வீட்டில் குறைந்தது ஐந்து வாழை மரங்கள் ஆகும் நாட்டப்பட்டிருக்கின்றது என்பது எனது நீர்வேலி மண்ணின் பெருமையான ஒரு விடயமாகும்.

பவித்திரா ஞானகுமார்

நுண்கலைத்துறை சிறப்பு கற்கை மாணவி

கிழக்கு பல்கலைக்கழகம்

நன்றி

Leave a Reply