வழக்கறிஞர் (Virginia Giuffre’) விர்ஜினியா கியூஃப்ரே இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் ரீதியான குற்றத்தை சுமத்திய நிலையில் குறித்த பழிவாங்கும் பிரச்சாரத்தை விசாரிக்குமாறு இளவரசர் ஆண்ட்ரூ தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்ட்ரூ இந்தக் கோரிக்கையை 2011 ஆம் ஆண்டில் செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் தனது குற்றஞ்சாட்டியவரின் பிறந்த திகதி மற்றும் சமூகப் பாதுகாப்பு எண்ணை தனது பாதுகாவலரிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மெட்ரோபொலிட்டன் பொலிசார் இந்தக் கூற்றுகளை விசாரிப்பதில்லை என்று கூறியமையினால் கியூஃப்ரேயின் குடும்பத்தினர் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதேவேளை, காவல்துறையின் மதிப்பீட்டில் “குற்றச் செயல்களுக்கோ அல்லது தவறான நடத்தைக்கோ கூடுதல் ஆதாரம் எதுவும் வெளிவரவில்லை ” என்று தெரிவித்து இந்த விடயத்தினை விசாரணைக்கு எடுத்துகொள்ள்வில்லை .
கடந்த 2011 ஆம் ஆண்டு இளவரசர் ஆண்ட்ரூ தன்னை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக கியூஃப்ரே என்பவர் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் ஆண்ட்ரூ இந்தக் குற்றச்சாட்டுகளை தற்போதுவரை மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
