இஸ்ரேலிய படையினரின் நவடடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்!

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது

அத்துடன் சமூக ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதேவேளை, இந்த தாக்குதல்களை மோசமான குற்றம் என கட்டார் அரசாங்கம் கண்டித்துள்ளது. சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படையினரின் இந்த நவடடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதற்கான பதிலடி கொடுக்கப்படும் எனவும் கட்டார் தெரிவித்துள்ளது.

மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அண்மையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக   கட்டார்   அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை கண்மூடித்தனமாக மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதகாவும் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கட்டார் குறிப்பிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply