இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எகிப்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் உலக தலைவர்கள் ஆதரவுடன் இஸ்ரேல் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – காசா போர் முடிவுக்கு வந்துள்ளது
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் – காசா இடையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் வகையில் எகிப்தில் மாநாடுக்கு ஏற்பாடு செய்தார். இதன்படி இன்று எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல்-சிசி ஆகியோரின் தலைமையில் நடந்த மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று இந்த அமைதி ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.
The post இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது appeared first on Global Tamil News.
