இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 12 விண்கலங்கள் (ரொக்கெட் ) விண்ணில் ஏவப்பட உள்ளதாக என, இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 30ம் திகதி , நாசாவும், இஸ்ரோவும் இணைந்து, ‘சிந்தடிக் அப்ரசர் ரேடார்’ (Synthetic Aperture Radar) செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 34 விதமான புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட செயற்கைக்கோள்களுடன், 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன எனவும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் இங்கிருந்து ஏவப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.