சவுதி அரேபியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸிற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அணு ஆயுத பரவலைத் தடுக்க அமெரிக்கா வழக்கமாக விதிக்கும் மிகக்கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் இன்றி இந்த ஒப்பந்தம் அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
‘ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால் நாங்களும் பெறுவோம்’ என சவுதி இளவரசர் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என ஜனநாயகக் கட்சியினர் எச்சரிக்கின்றனர்.
இந்த ஒப்பந்தம் பெப்ரவரி 22-ஆம் திகதி காங்கிரஸில் சமர்ப்பிக்கப்படலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

