வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களை குறைக்க, ஈரானும் அமெரிக்காவும் நேரடி தகவல் தொடர்பு வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே,அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்தார்.
நீடித்து வரும் அரசியல் மற்றும் அணுசக்தி தொடர்பான பதற்றங்களுக்கு மத்தியில், இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன.
