78
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்–இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் பிரான்சிஸ் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். St. Peter’s Square இல் நடைபெற்ற வாராந்திர திருப்பலியின் போது பேசிய அவர், போர் தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த மோதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கு மக்கள் போரின் கொடூரமான வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,” என சுட்டிக்காட்டிய அவா் மோதலுக்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவித்து, அமைதிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
#PopeFrancis #MiddleEastPeace #CeasefireNow #VaticanNews #IranIsraelConflict
