உக்ரைன் போர் நிறுத்தம் இல்லை: ட்ரம்ப் – புதின் சந்திப்பும், தொடரும் பின்னடைவும்! | Trump Putin meet ends with no Ukraine ceasefire

வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்​பில் அதிபர் புதின் உடன் வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாரவ், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஆண்ட்ரே பெலோ​சோவ், நிதியமைச்​சர் அண்​டன் சிலுன்​னோவ் மற்​றும் 2 மூத்த அதி​காரி​கள் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் ட்ரம்ப் – புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போராட்டன என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனின் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “புதின் உடனான இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது. ஆனால் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இதுவரை நான் போனில் பேசவில்லை. விரைவில் அவருடன் பேச திட்டமிட்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் ட்ரம்ப் கூறும்போது, “இப்போது இதைச் செய்து முடிப்பது உண்மையில் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும். ஐரோப்பிய நாடுகளும் இதில் கொஞ்சம் தலையிட வேண்டும் என்று நான் கூறுவேன், ஆனால், இது முழுக்க அதிபர் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும்” என்றார்.

முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இப்​போதைய நிலை​யில் உக்​ரைனின் 22 சதவீத பகு​தி​களை ரஷ்யா கைப்​பற்றி உள்​ளது. கடந்த ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடு​கள் இடையி​லான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வரு​கிறார்.

இது தொடர்​பாக கடந்த பிப்​ர​வரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்​கள் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியானது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப் “இந்தப் பேச்​சு​வார்த்தைக்கு பிறகும் உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும். என்னவித​மான விளைவு​கள் என்​பதை இப்​போதைக்கு பகிரங்​க​மாக கூற முடி​யாது.

ரஷ்ய அதிபர் புதின் உடனான பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக அமைய விரும்​பு​கிறேன். இதன்​பிறகு உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கியை சந்​தித்​துப் பேசுவேன். இந்தச் சந்​திப்​புக்​குப் பிறகு முத்​தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும். இதில் அமெரிக்​கா, ரஷ்​யா, உக்​ரைன் அதிபர்​கள் பங்​கேற்​பார்​கள்” என்று கூறியிருந்தார். ஆனால், ரஷ்ய அதிபர் உடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சந்திப்பில், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply