கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற இரண்டாவது விசேட நடமாடும் சேவை இன்று உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே இந்த விசேட நடமாடும் சேவை இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினர்களாக
ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் ந. சஞ்சீவன், கிளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் துலீப் சேமரத்தன ஆகியோரும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இறுதியில் விசேட நிகழ்வாக புதுமணத் தம்பதி ஒருவருக்கான பிறப்புச் சான்றிதழ் முதல் தடவையாக வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பதிவுத் திருமணம் நடைபெற்றது.
திருமணப் பதிவுச் சான்றிதழ் உத்தியோகபூர்வமாக அமைச்சரினால் தம்பதியினருக்கு வழங்கப்பட்டது. மேலும் புதிதாக பதியப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிக்கான ரயர்களும் பொதுமக்களுக்கான தென்னங்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கண் பரிசோதனையின் பின்னரான இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டிருந்தது.