உயிரிழந்த 45 ஈரான் மாலுமிகளின் உடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு

காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

காலி போதனா மருத்துவமனையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 உடலங்களும் தற்போது மத்தல வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட வழங்கிய உத்தரவிற்கு அமைவாகவே, குறித்த உடலங்கள் இன்று மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்த ஏனைய மாலுமிகளின் உடல்களும் அடுத்தடுத்த கட்டங்களாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply