உலகத் தாய்மொழிகள் தினத்தில் ! உணவின் மொழியாக; உள்ளூர் உணவுகளின் ; மடை பரவல் !!

உலகத் தாய்மொழிகள் தினத்தில் !

உணவின் மொழியாக;

உள்ளூர் உணவுகளின் ;

மடை பரவல் !!

 

மூத்தவர்களின் நினைவுகளில் இருந்து,

அவர்களின் அனுபவங்களில் இருந்து,

திறன்களில் இருந்து…….

 

கைவிட்டுப்போன, அருந்தலாகிப்போன,

இழக்காரமாகிப்போன……..

இன்னமும் புளக்கத்திலுள்ள

ஊட்டமான உள்ளூர் உணவுகளின்

பல்வகைச் சுவைகளை

எமதாக்கிக்கொள்ளும்

எமது சுகநல வாழ்விற்கான

எமது பயணம்

எமது தன்னிறைவு வாழ்விற்கான

எமது பயணம்

எமது தலைமுறைகளுக்கான

எமது பயணம்

 

மடை பரவல் ;

தன்னார்வ உணவு உருவாக்குனர்களின்

கூட்டு, கூட்டமைப்பு, கூட்டுறவு

உருவாக்கங்களுக்கான களம்

 

மடை பரவல் ;

எங்கள் முன்னோர்கள் கண்டடைந்த

உள்ளூர் உணவுசார் அறிவுமுறைகளை சமகாலத்துடனும்;

உலகம் தழுவிய உள்ளூர்

அறிவுமுறைகளுடனும் சமாந்தரப்படுத்தலுக்கான  களம்

 

மடை பரவல்;

உள்ளூர் உணவு முறைகளின்

பல்வகைத் தன்மைகளை,

பல்வகைச் சுவைகளை

சமூகப் பண்பாட்டிற்கு உரியதாக்கும் களம்.

 

மடை பரவல்;

உள்ளூர் உணவுகளில் தன்னிறைவு

அடைவதற்கான பல்துறை சார்ந்த

அறிவு திறன்களது சந்திப்புக் களம்

 

இது கிழக்குப் பல்கலைக்கழக தொழிற்றுறை – சமுதாய இணைப்பு மையத்தின் முன்னெடுப்பு

3

jeyasankar sivagnanam

 

The post உலகத் தாய்மொழிகள் தினத்தில் ! உணவின் மொழியாக; உள்ளூர் உணவுகளின் ; மடை பரவல் !! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply