உலக சாதனை செய்த ஆப்கானியர்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நீதியும் அமைதியும் நல்லிணக்கமும் நிலைபெற்ற பிறகு டாலரின் மதிப்பு சரிந்து கொண்டே போனது.
ஆப்கனியின் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது. இவ்வாறாக நான்கே ஆண்டுகளில் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 67 ஆப்கனிகளாக உயர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இது ஒரு உலக சாதனையாகும் என்று ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர் கான் முத்தகி தில்லியில் அறிவித்துள்ளார்.
எதனால் இந்த வளர்ச்சி? இப்போது எங்களுடைய நாட்டில் கலவரம் இல்லை. குழப்பம் இல்லை. போதை இல்லை. அமைதி நிலைபெற்றுள்ளது. எங்கள் மீது எவருடைய ஆதிக்கமும் இல்லை. அரசியலும் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
ஆப்கானிஸ்தானின் இந்த அபாரமான வளர்ச்சி மலைக்க வைக்கின்றது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
– Azeez Luthfullah –

