எமக்கு இருக்கும் ஒரே ஆயுதமான கல்வியை விற்க ஒரு போதும் அனுமதி இல்லை !

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைகுட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என பிரதேச சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு , பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் ( 28 ) ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

மாணவர்களுக்கு அதிகரித்து வரும் உள நெருக்கடிக்கு தீர்வினை வழங்கியும் மாணவர்களுக்கான கல்வி நெருக்கடியை குறைக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

இதன் போது தரம் 06 தொடக்கம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு ஒன்றரை மணித்தியாலத்திற்கு 50 ரூபாவும், உயர் தர மாணவர்களுக்கு 100 ரூபாயும் அறவிடுவதாகவும் தீர்மானித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.

இதனிடையில் இவ்வாறு பல்வேறு விட்டுகொடுப்புகளுக்கு மத்தியில் மாணவர்களுக்காக பேராதரவை வழங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் உரிமையாளர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இதேவேளை, மாணவர்களுக்காக எந்த நிலைக்கு சென்றும் கல்வியை பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply