எரிபொருட்களின் விலைகளில் உயர்வு

இன்று -21-  நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) எரிபொருள் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 


இதற்கமைய, டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 382 ரூபாவாகவும், சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 443 ரூபாவாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

 

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 398 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. 


இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply